அழகாக சுருள் சுருளாக கருமையான தலைமுடி. அப்படி ஒரு அடர்ந்த தலைமுடி. மீசை லேசாக அரும்பிய முகம். கலையான முகம் முழுவதும் புன்னகை ஒளிந்திருந்தது. லேசாக சிரித்தால் கூட குழி விழும் கன்னம். சிரிக்கும் போது அழகாக வரிசையாய் தெரிந்த முத்து போன்ற பற்கள். இளமை ததும்பும் வாலிப உடம்பு. பார்பதற்கு யாரோ ஒரு சிறு வயது நடிகரை ஞாபகபடுத்தியது.
வாலிப பருவத்தில் எடுத்த தன்னுடைய போட்டோ ஆல்பத்தை ஆசையாய் பார்த்துகொண்டிருந்தார் வழுக்கை தலையும் கன்னத்தில் டொக் விழுந்து பல்லு போன கிழவருமான 70 வயது தாத்தா.
No comments:
Post a Comment